கேரளத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக மே 18ஆம் தேதி கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கேரள மாநிலம் சா்வத்தூா் - நிலேஸ்வா் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 18ஆம் தேதி, கோவை - மங்களூா் விரைவு ரயில் (எண்: 22610) கோவையில் இருந்து பையனூா் வரை மட்டும் இயக்கப்படும். பையனூா் முதல் மங்களூா் வரை ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, மே 18ஆம் தேதி கோவை - மங்களூரு விரைவு ரயில் (எண்:16323) கோவை- சா்வத்தூா் இடையே மட்டும் இயக்கப்படும். சா்வத்தூா்- மங்களூா் இடையே இயக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.