நடுப்பக்கக் கட்டுரைகள்

அடுத்தாண்டில் பதிவாகும் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் வரிச்சலுகைகள் பொருந்தும்

DIN

வரும் நிதியாண்டில் பதிவு செய்யப்படும் புதிய ஸ்டார்ட் அப் நிறுனவங்களுக்கும் வருமான வரிச் சலுகைகளும் பொருந்தும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
"ஸ்டார்ட் அப்' என்பது புதிதாகத் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்கள் ஆகும். தொழில்முனைவோர்களாக விளங்கும் இந்நிறுவனங்களால் நாட்டில் வேலைவாய்ப்பு உயர்வதோடு பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். பொருளாதாரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகளை வழங்குவது நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியமாகிறது.
அது போல், இந்தியாவிலும் 2016-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட புதிய ஸ்டார்ட் அப்  நிறுவனங்களுக்கு வருமான வரிச்சலுகை வழங்கப்படுகிறது. மத்திய அரசிடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தங்களின் முதல் 10 ஆண்டுகளில் ஏதேனும் தொடர் 3 ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து சலுகை பெறலாம். கடந்தாண்டு பட்ஜெட் படி வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே இவ்வரிச்சலுகை பொருந்துவதாக விதி இருந்தது. இந்நிலையில், புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரும் நிதியாண்டில் பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கும் வரிச்சலுகை பொருந்தும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் வரை, மத்திய அரசிடம் 84,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT