ஸ்பெஷல்

ஜீ தமிழ் அர்ச்சனாவைத் தொடர்ந்து பிரியா ராமன்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக செம்பருத்தியிலிருந்து விலகினாரா?

தினமணி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் அகிலாண்டேஸ்வரி என்ற பாத்திரத்தில் நடித்து வந்த பிரியா ராமன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தொடரிலிருந்து விலகினாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். 

கதையின்படி கொலை செய்த குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற அகிலாண்டேஸ்வரி 40 நாள்களுக்கும் மேலாக ஒரு காட்சியில் கூட காட்டப்படவில்லை. 

கதையின் முதன்மை பாத்திரமான அகிலாண்டேஸ்வரியை புறக்கணித்து அவரது மருமகள்கள் பார்வதி - ஐஸ்வர்யாவை மையப்படுத்தி செம்பருத்தி தொடரின் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் அகிலாண்டேஸ்வரியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றுதான் கூற வேண்டும்.

ஏற்கெனவே அடிக்கடி மாற்றப்படும் முதன்மை பாத்திரங்களால் செம்பருத்தி தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையும் குழப்பத்தையுமே ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தை மாற்றுவது, அல்லது அந்த பாத்திரத்தை புறக்கணிப்பது செம்பருத்தி தொடருக்கு மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும்.

பார்வதி - ஐஸ்வர்யா இடையேயான அதிகார மோதல் காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறத்தவறிய நிலையில், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப காட்சிகளை மாற்றியமைக்காதது ஓடும் குதிரையை விட்டுவிட்டு நொண்டிக் குதிரையின் மீது சவாரி செய்வது போன்று உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் மாற்றப்பட்டது முதலே செம்பருத்தி முடிவுக்கு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இருந்தபோதும் தொகுப்பாளர் அக்னி என்பவரை ஆதி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தொடரை நகர்த்தி வந்தனர். 

ஆனால் இடையிடையே நாள்தோறும் தென்படும் முக்கிய கதாபாத்திரங்களையும் அடுத்தடுத்து மாற்றியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு மக்கள் மத்தியில் செம்பருத்தி வாடத்தொடங்கியுள்ள நிலையில், பிரியா ராமனும் தொடரிலிருந்து விலகினாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக செல்லவுள்ளதால், அவர் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஏற்கெனவே ஜி தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்துகொண்டார். கடந்த சீசன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த சீசனுக்கும் மற்ற தொலைக்காட்சியில் இருக்கும் பிரபலங்களை போட்டியாளர்களாக பங்குபெற வைக்கும் முயற்சிகள் விஜய் தொலைக்காட்சி சார்பில் நடைபெறலாம்.

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 5-ல் பிரியா ராமன் போட்டியாளராக கலந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது. அவர் ஜி தமிழில் அர்ச்சனா தொகுத்து வழங்கிய பிரபலமான 'ஜீன்ஸ்' என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் சீசன் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் அதிகம் எழுந்தாலும், அதற்கு அடுத்து வந்த சீசன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றன. 

யூடியூப், முகநூல் போன்றவற்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் அதிகம் பரவி அனைத்து தரப்பு இளைஞர்கள் மத்தியிலும் அந்நிகழ்ச்சி பிரமலமானது.

30 பிரபலங்களை வைத்து நூறு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் வாக்கெடுப்பு மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளும் உருவாகும் நிலை ஏற்படுவதால், சின்னத்திரை நடிகர்கள், தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், விளம்பர நடிகர்கள், சமூக வலைதள பிரபலங்கள் என பலரும் போட்டியாளராக விரும்பும் நிகழ்ச்சியாகவே பிக்பாஸ் உள்ளது எனலாம்.

ஆனால், ஒற்றைக் கேமராவின் முன்பு நடிப்பதைப் போன்று பிக்பாஸில் அந்த நூறு கேமராக்கள் முன்னாடி நடிக்க இயலாது என்பதை புரிந்துகொள்ளும் பிரபலங்கள் மக்கள் மனங்களை வென்றவர்களாகவே வெளியே வருகின்றனர்.

பிரியா ராமன் பிக்பாஸ் வீட்டிற்குச் சென்றால் ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரியாக மக்கள் மனங்களில் நின்று ஆட்சி புரிவாரா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT