ஸ்பெஷல்

விபத்தில் சிக்கிய 'கயல்' நாயகி உருக்கம்: டிஆர்பி-யில் முதலிடத்தைத் தக்கவைக்குமா?

30th Nov 2021 04:55 PM

ADVERTISEMENT

 

சன் தொலைக்காட்சி தொடர்களில் முதலிடம் பிடித்துள்ள ’கயல்’ தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டி கையில் ஏற்பட்டுள்ள காயங்களுடன் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். 

விபத்து ஏற்பட்டு ஒரு வாரமேயான நிலையில், கையில் ஆறாத காயங்களுடன் 'கயல்' தொடரில் நடித்து வருகிறார். 'கயல்' தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு மாதத்திலேயே பிரபல தொடர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.

தொடர் தொடங்கி 30 எபிஸோடுகள் கூட முடியாத நிலையில், மக்கள் மனங்களைக் கவர்ந்து முதலிடம் பிடித்ததால், அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள போதிய முயற்சிகளை அந்தத் தொடரின் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே முதன்மை கதாபாத்திரமான சைத்ரா ரெட்டி காயங்களுடன் மீண்டும் நடிக்க வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 'கயல்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 'முந்தானை முடிச்சு', 'மரகத வீணை', 'கேளடி கண்மணி', 'அழகு' போன்ற தொடர்களை இயக்கிய இயக்குநர் பி.செல்வம் 'கயல்' தொடரை இயக்குகிறார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'யாரடி நீ மோகினி' தொடரில் நடித்த சைத்ரா ரெட்டி, 'கயல்' தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் 'ராஜா ராணி', 'காற்றின் மொழி' ஆகிய தொடர்களில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் கதாநாயகநாக நடித்து வருகிறார். 

தந்தையை இழந்த குடும்பத்தின் அனைத்து பொருப்புகளையும் சுமக்கும் பெண்ணை மையப்படுத்தி எழும் பிரச்னைகளும், நிகழ்வுகளுமே ’கயல்’ தொடரின் மையக் கதை.  கயலின் நண்பராக எழில் கதாபாத்திரத்தில் சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார். 

இந்த தொடர் ஒளிபரப்பான முதல் மாதத்திலேயே சன் தொலைக்காட்சியில் அனைத்து முன்னணி தொடர்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது. ஒரு தொடர் ஆரமிக்கப்பட்ட சில நாள்களிலேயே அனைத்து தரப்பு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், டிஆர்பி பட்டியலில் முதலிடம் பிடிப்பது சிரமமான காரியம். ஆனால் 'கயல்' தொடர் ஒரு மாதத்திற்குள் இந்த இரண்டையுமே செய்துள்ளது.

செவிலியராக வரும் கயல், பல நடுத்தரப் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சந்திப்பதால் அதிகப்படியான மக்கள் கயல் பாத்திரத்தை தங்கள் வாழ்வில் பொருத்திக்கொள்கின்றனர்.  இதுவே இந்த தொடரின் ஆரம்ப வெற்றி.

கடனுக்காக வட்டிக்காரர்களுக்கு பதிலளிக்கத் திணறுவது, குடும்பத்தினரின் தவறுகளுக்கு முன்னின்று தீர்வு காண்பது, பணியிடங்களில் வெறியர்களால் பாலியல் சீண்டல்களை எதிர்கொள்வது என்று குடும்பத்தின் பிரச்னைகளையும் சமூகத்தின் பிரச்னைகளையும் கயல் என்ற ஒரே கதாபாத்திரத்தின் மூலம் பேசுவதால் இதன் ஒவ்வொரு நாள் எபிஸோடும் பார்வையாளர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கிறது.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கயல் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சைத்ரா ரெட்டி விபத்தில் சிக்கினார். கையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் ஒருவாரம் ஓய்வெடுத்துள்ளார். எனினும் கைகளில் காயம் ஆறாத நிலையில், மீண்டும் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார். அவர் தொடர்பான காட்சிகள் தொடராக்கப்பட்டும் வருகிறது. 

கயல் கதாபாத்திரத்திற்கு அத்தனை வரவேற்பு இருக்கும்போது, சிறிது இடைவெளி ஏற்படுத்தினாலும் அது டிஆர்பி ரேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனை உணர்ந்த சைத்ரா காயத்தையும் பொருட்படுத்தாது தொடரில் நடிக்க வந்துள்ளார். 

பல தொடர்களில் முதன்மை பாத்திரங்களில் நடித்து வரும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் சிறிது இடைவெளி எடுத்தாலும், அது அந்த தொடரையும் பாதிக்கிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடர் மிகச்சிறந்த உதாரணம். விட்ட இடத்தைப் பிடிக்க அந்த தொடர் இன்னும் போராடி வருகிறது. 

 

இதனை உணர்ந்த சைத்ரா ரெட்டி படப்பிடிப்பிற்கு வந்துள்ளார். கையில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து பதிவிட்டுள்ள அவருக்கு ரசிகர்கள் விரைந்து நலம் பெற வேண்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் நலம் விசாரித்தும் வருகின்றனர். மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்ததால், காயங்களுடன் நடிக்க வந்த ’கயல்’ போட்டி பட்டியலிலும் மீண்டும் முதலிடம் பெருமா?.

Tags : serial kayal கயல் tamil serial Serial TRP
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT