வெற்றிக்கு காரணமான கேர்ள் ஃப்ரெண்டுக்கு மனமார்ந்த நன்றி: UPSC தேர்வின் நேஷனல் டாப்பர் கனிஷ்கா கட்டாரியா!!

கனிஷ்கா விஷயத்தில் இன்னுமொரு ஸ்பெஷல் என்னவென்றால், இதுவரை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் எவருமே தனது காதலன் அல்லது காதலிக்கு தேர்வில் பெற்றமைக்கு நன்றி தெரிவித்து
வெற்றிக்கு காரணமான கேர்ள் ஃப்ரெண்டுக்கு மனமார்ந்த நன்றி: UPSC தேர்வின் நேஷனல் டாப்பர் கனிஷ்கா கட்டாரியா!!

நேற்று வெள்ளியன்று வெளியானது UPSC தேர்வு முடிவுகள். அதில் அனைத்து மாநிலங்களுக்கிடையிலான தரவரிசைப் பட்டியலில் இந்திய அளவில் முதலிடம் பெற்றவராக கனிஷ்கா கட்டாரியா எனும் இளைஞர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். கனிஷ்கா, தான் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றதற்கும், தேர்வுகளுக்கு நன்றாகப் படித்து தயார் செய்வதற்கும் தனது கேர்ள் ஃப்ரெண்டு மிகவும் உதவியாக இருந்தார் என்று குறிப்பிட்டு மிகுந்த நெகிழ்ச்சியுடன் அவருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்திருந்தார். காதலிக்கு மட்டுமல்ல தான் தேர்வில் வெற்றி பெற தனது பெற்றோர் மற்றும் சகோதரியும் கூட மிகுந்த புரிந்துணர்வுடன் உதவியாக இருந்தார்கள் என்று கூறும் கனிஷ்கா யு பி எஸ் சி தேர்வில் முதன்மைப் பாடமாக எடுத்துக் கொண்டது கணிதத்தை. எஸ் சி பிரிவைச் சேர்ந்த கனிஷ்கா மும்பை ஐஐடி யின் பி டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் & இஞ்சினியரிங் துறை மாணவர். 

இன்னும் கூட தான், நேஷனல் டாப்பர் ஆனதை நம்ப முடியாத சந்தோஷ திக்குமுக்காடலில் இருக்கிறார் கனிஷ்கா. தேர்வுக்காக நான் நன்றாகத் தயார் செய்திருந்தேன், நல்ல மதிப்பெண்கள் பெற்று கெளரவமான ரேங்க் பெறுவேன் என்று நினைத்தேனே தவிர முதல் ரேங்க் பெறுவேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. என்னுடன் தேர்வு எழுதி வெற்றி பெற்ற அத்தனை நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று நெகிழ்கிறார் கனிஷ்கா. மக்கள் நான் ஒரு மிகச்சிறந்த நிர்வாகியாக இருப்பேன் என்று எதிர்பார்க்கிறார்கள் அவர்களது நம்பிக்கையை நான் நிச்சயம் பூர்த்தி செய்வேன் என்கிறார் கனிஷ்கா.

கனிஷ்கா விஷயத்தில் இன்னுமொரு ஸ்பெஷல் என்னவென்றால், இதுவரை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் எவருமே தனது காதலன் அல்லது காதலிக்கு தேர்வில் பெற்றமைக்கு நன்றி தெரிவித்து தமது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டது இல்லை. அந்த வகையில் கனிஷ்கா தனது காதலிக்கு நன்றி தெரிவித்ததன் மூலம் அதிலும் தானே டாப் ரேங்கர் என்ற சிறப்புத் தன்மைக்கு உரியவராகியிருக்கிறார்.

யுபிஎஸ்சி வெளியிட்ட தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொத்தம் 759 பேர். அதில் 577 பேர் ஆண்கள். 182 பேர் பெண்கள். இவர்களில் பலரும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப் எஸ் பணிகளுக்காக யுபிஎஸ்சியால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். 

இத்தேர்வில் பெண்களில் முதலிடம் பெற்றுள்ள ஸ்ருஷ்டி ஜெயந்த் தேஷ்முக் அகில இந்திய அளவில் இத்தேர்வில் 5 ஆம் இடம் பெற்றுள்ளார். கெமிக்கல் இஞ்சினியரான ஸ்ருஷ்டி போபால் ராஜிவ் காந்தி பிரெளவுத்யோகி வித்யாலயா கல்லூரியில் தமது இளநிலைக் கல்வியை முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com