திரை விமரிசனம்

'அழகும் வெறுப்பும்...' பியூட்டி - திரைவிமர்சனம்

கவிதா சரவணன்

புகழ்பெற்ற உளவியல் மருத்துவரான   கோவூரிடம்  சிகிச்சைக்கு வந்த ஒரு உண்மை நிகழ்வினை அடிப்படையாக கொண்டு  'மறுபிறவி' என்ற திரைப்படம் ராமண்ணாவால் 1973 ஆம் ஆண்டு  இயக்கப்பட்டு  வெளிவந்தது. அப்படி, தமிழ்த் திரையுலகில் அரிதாக வந்த உளவியல் சார்ந்த படங்கள் வரிசையில் 'பியூட்டி' புதிய வரவாகும்.

தனது தாயை இழந்த சிறுவனுக்கு அப்பாவின் இரண்டாவது மனைவியாக வரும் அழகான சிற்றன்னை அவனை வெறுப்புடன் துன்புறுத்துகிறார். ஒருநாள் அவனையும் ஊரில் மதிக்கத்தக்க பண்ணையாரான  அவனது அப்பாவையும் விட்டுவிட்டு வேறொருவருடன் வீட்டை விட்டு போய்விடுகிறார்.

அவமானம் தாங்காமல் இருவரும்  ஊரை விட்டு வெளியேறுகின்றனர்.
தனது மகனை ஒரு நாளும் அழகானவளை தேர்ந்தெடுக்காதே ஏதாவது குறைப்பாடு உள்ளவளை தேடிக் கண்டுபிடித்து  கல்யாணம் செய்துகொள் என வலியுறுத்தி அப்பா  இறந்துவிடுகிறார்.

தந்தை வேடத்திலும் மகன் வேடத்திலும் நடித்துள்ள ரிஷி, வளரவளர "அழகு" என்ற சொல்லையே வெறுக்கிறார்.

வங்கி அலுவலரான ரிஷி, கோரமுகம் கொண்ட கரினாகபூரை விரும்புகிறார்.
தனது குடும்ப மருத்துவர் உதவியுடன் தீக்காயத்தினால் ஏற்பட்ட வடுக்களை அறுவைசிகிச்சை செய்துகொண்டு அழகு முகத்துடன் ரிஷியை வியப்பில் ஆழ்த்துகிறார் கரினாகபூர்.  மகிழ்வதற்கு பதில் அவள் முகத்தை மீண்டும் கோரமாக்க வெறி கொண்டு அலையும் ரிஷியின் ஆழ்மனப் பாதிப்பை மாற்றுவதுதான் கதை.

கதையின் தொடக்கம் முதல் நிறைவு வரை உளவியல் மனப்பிறழ்வுகளை கண்ணிகளாகக் கோர்த்து, கதையினை  சங்கிலித் தொடராக திரைக்கதை, வசனம் , இயக்கம் வழி  இணைத்திருக்கிறார்  அறிமுக இயக்குநர் ஆனந்தசிவா.

அழகை வெறுக்கும் ரிஷி, புதிதாக வாங்கிய தனது இருசக்கர வாகனத்தை கோரமாக்குவதிலிருந்து... மரம், இலை, செடி, கொடி, ஓவியம், பொம்மைகள் அனைத்தும் கோரமாக ஒவ்வொரு காட்சிப் படிமங்களிலும்  வெளிப்படுத்தும் கலையினை செய்த ஆர்.கே.வெங்கட், தேர்ந்த ஒளிப்பதிவு செய்து படத்தை தயாரித்துள்ள  ஆர்.தீபக்குமார், பிசிறின்றி படத்தொகுப்பு செய்த கே.சங்கர்,
வெ.இறையன்பு மற்றும்  தமிழ்முருகன் எழுதியப் பாடல்களை செவிக்கு இன்பமாக்கி, விறுவிறுப்பான பின்னணி இசை தந்த இலக்கியன், அப்பா- மகன் என  உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ள நாயகன் ரிஷி, ஈடுகொடுத்துள்ள நாயகி கரினாகபூர், குணசித்திர வேடத்தில் முத்திரைப் பதிக்கும் சிங்கமுத்து, காயாகபூர், ஆதஷ்பாலா, உளவியல் மருத்துவர் ஆனந்தன் என பொருத்தமாக படத்தினை ஒருங்கிணைத்துள்ளார் இயக்குநர் ஆனந்தசிவா.

அழகை ஆராதிப்பவர்களுக்கும் அதனை சிதைக்க நினைப்பவர்களுக்கும் அழகு என்பது தோற்றப்பொலிவு அல்ல அன்பு, மனம், மனிதம் எனச் சொல்கிறது "பியூட்டி ".

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT