நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தி நடிப்பில் விருமன் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். முத்தையா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இதையம் படிக்க | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தனுஷின் மாறன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADVERTISEMENT
இந்த நிலையில் பொங்கல் தின சிறப்பாக இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Unveiling the first look of #Viruman tomorrow at 10 AM