திரை விமரிசனம்

பயணத்தில் வென்றாரா? டிரைவர் ஜமுனா - திரைவிமர்சனம்

30th Dec 2022 06:03 PM | சிவசங்கர்

ADVERTISEMENT

 

‘வத்திக்குச்சி' படத்தை இயக்கிய பி.கின்ஸிலின் இயக்கத்தில் நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம்  இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுநராக நடித்துள்ள இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

முன்னாள் எம்எல்ஏவைக்(நரேன்) கொல்ல சதித்திட்டம் தீட்டும் கூலிப்படையினர் தங்கள் காரில் செல்கிறார்கள். ஆனால், திடீரென அந்தக் கார் விபத்துக்குள்ளாகிறது. பின்னர், அவர்கள் வாடகைக் கார் ஒன்றை முன்பதிவு செய்கிறார்கள். அக்காரை ஓட்டிவருபவர் ஜமுனா(ஐஸ்வர்யா ராஜேஷ்).

ADVERTISEMENT

ஒருகட்டத்தில் காரில் வருபவர்களைப் பற்றி ஜமுனா அறிந்துகொள்கிறார். அதன்பின், எந்த நடந்தது? அக்கூலிப்படையினர் எம்எல்ஏவைக் கொன்றனரா இல்லையா என்கிற மீதிக்கதையில் சாலை பயணத்தை அடிப்படையாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது டிரைவர் ஜமுனா.

இதையும் படிக்க: 'துணிவு’ படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்

தன் அப்பா கொலைசெய்யப்பட்ட பின் அவர் செய்துவந்த கார் ஓட்டுநர் பணியை பதற்றத்துடன் செய்யும் ஜமுனா சில காட்சிகளில் வெளிப்படுத்தும் பாவனைகள் கதைக்கு சரியாக  பொருந்தியுள்ளது. அதனாலேயே அடுத்தடுத்த காட்சிகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்கிறார்.

ஆனால், இரண்டாம் பாகத்தில் தென்பட்ட திரைக்கதை தொய்வு படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் தரமான ஒளிப்பதிவின் மூலம் படத்தைத் தாங்கியுள்ளார். சாலைப் பயணத்திலேயே அதிக காட்சிகள் இருந்தாலும் அதன் விறுவிறுப்பு குறையாத ஒளிப்பதிவு கூடுதல் பலம்.

வித்தியாசமான கருவை யோசித்த இயக்குநர் கின்ஸிலின் இன்னும் கொஞ்சம் பரபரப்பு காட்சிகளை சேர்த்து திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம்.

‘திரில்லர்’ பாணியில் உருவானாலும் லாஜிக் இல்லாத சில காட்சிகள் படத்தின் பலவீனம்.

கதாநாயகியாக நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதிலும் கார் ஓட்டுநராக சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆடுகளம் நரேன்,  மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் சரியான தேர்வு. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ள ‘டிரைவர் ஜமுனா’ இன்னும் வேகத்தை கூட்டியிருந்தால் ஒருமுறை பார்க்கலாம் என்கிற தரத்திலிருந்து ’நல்ல படமாக’ மாறியிருக்கும்!

ADVERTISEMENT
ADVERTISEMENT