செய்திகள்

நியூயார்க்கில் சைக்கிள் ஓட்டிய த்ரிஷா: வைரல் விடியோ!

30th Sep 2023 12:06 PM

ADVERTISEMENT

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடிகை த்ரிஷா சைக்கிள் ஓட்டும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.

அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு பிறகு,  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து, குந்தவையாக ரசிகர்களிடம் பிரபலமானார்.

ADVERTISEMENT

தற்போது, விஜய்யின் லியோ மற்றும் மலையாளத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக ராம் திரைப்படத்தில் த்ரிஷா  நடித்து முடித்துள்ளார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி ரோட் திரைப்படம் வரும் அக்.6ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், தனது விடுமுறை நாள்களை கொண்டாடுவதற்காக நடிகை த்ரிஷா நியூயார்க் நகரத்துக்கு சென்று இருக்கிறார்.

அங்கிருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைக்கிள் ஓட்டும் விடியோ மற்றும் சில புகைப்படங்களை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தொடர்ந்து முதலிடத்தில் எதிர்நீச்சல்: இந்த வார டிஆர்பி பட்டியல்!

நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள விடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT