செய்திகள்

கவனம் ஈர்க்கும் தி ரோட் படத்தின் புதிய பாடல்!

30th Sep 2023 08:51 AM

ADVERTISEMENT

நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள ‘தி ரோட்’ படத்தின் புதிய பாடல்  வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷா லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

அவர் நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் ‘தி ரோட்’ படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர்.

பான் இந்திய திரைப்படமாக அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் கிரைம் திரில்லர் கதையாக ‘தி ரோட்’ உருவாகியுள்ளது. இப்படம் வரும் அக்.6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT

இப்படத்தில் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.ஸ். இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில், ‘தி ரோட்’ படத்தில் நகராத நொடியோடு என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிக்க: சந்திரமுகி 2 படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

முன்னதாக, சித் ஸ்ரீராம் பாடிய ஓ விதி பாடல் வைரலான நிலையில், தற்போது இப்பாடல் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT