செய்திகள்

ரஜினி 170வது படம் குறித்த புதிய அப்டேட்

30th Sep 2023 08:43 PM

ADVERTISEMENT

ரஜினியின் 170வது படம் குறித்த புதிய அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். இந்த படத்திற்கும் அனிருத்துதான் இசை. படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. படப்பிடிப்பு வரும் 4ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதற்காக செட் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்க உள்ளனர். அது முடிந்ததும் படத்தின் மற்ற படப்பிடிப்பை கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 
படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியான நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் ரஜினியின் 170வது நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT