செய்திகள்

சத்யராஜ் - வசந்த் ரவியின் வெப்பன் படப்பிடிப்பு நிறைவு

30th Sep 2023 02:50 PM

ADVERTISEMENT

சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடித்துள்ள வெப்பன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில், மில்லியன் ஸ்டுடியோ எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வெப்பன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இப்படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.


இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, நடிகர்கள் யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT


இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க: சசிகுமாரின் எவிடன்ஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் மற்றும் பட வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்கவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT