செய்திகள்

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற மார்க் ஆண்டனி இயக்குநர்

30th Sep 2023 10:16 PM

ADVERTISEMENT

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து மார்க் ஆண்டனி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வாழ்த்துப் பெற்றார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், ஊக்கமளித்து பாராட்டியதாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள். ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்துப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT