செய்திகள்

சசிகுமாரின் எவிடன்ஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

30th Sep 2023 01:39 PM

ADVERTISEMENT

சசிகுமார் நடிக்கும் எவிடன்ஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் களமிறங்கியவர் சசிகுமார். சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார், அதன்பின் நடிப்பில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. தொடர்ந்து, எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப் பரம்பரை’ நாவலை அவர் இயக்கவுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

தற்போது, காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் இயக்குநர் ஆர்டிஎம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் நடிகர் சசிகுமார்.

ADVERTISEMENT

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸின் சார்பில் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா, யோகி பாபு நடிக்கின்றனர். இப்படத்துக்கு ரான் ஈதன் ஹோஹான் இசையமைக்கிறார். கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையும் படிக்க: நியூயார்க்கில் சைக்கிள் ஓட்டிய த்ரிஷா: வைரல் விடியோ!

இந்த நிலைடில், இப்படத்தின்  முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT