செய்திகள்

லஞ்சப் புகார் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு நன்றி: விஷால்

30th Sep 2023 04:46 PM

ADVERTISEMENT

திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்காக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஊழலில் ஈடுபடாமல் நேர்மையாக நாட்டுக்கு சேயாற்ற அதிகாரிகளை இது ஊக்குவிக்கும. பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் நன்றி. ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்பைப் போன்ற ஒரு சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வைத் தருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

விஷால் நடிப்பில் செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள். ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் நேற்று ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.  இதனிடையே, மகாராஷ்டிராவில் இப்படத்தின் டப்பிங் மற்றும் திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு பரிவர்த்தனைகளாகக் கேட்ட தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் தெரிவிததார். 

ADVERTISEMENT

நடிகர் விஷாலின் இந்த குற்றச்சாட்டு சினிமா துறையினரிடம் மட்டுமன்றி பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக்ம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT