செய்திகள்

சந்திரமுகி 2 படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

29th Sep 2023 09:57 PM

ADVERTISEMENT

சந்திரமுகி 2 படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், மிகப்பெரிய வெற்றி படமான தன்னுடைய சந்திரமுகியை புதிதாக வேறு ஒரு கோணத்தில் ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்குப் படமாக சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் வாசுவுக்கும், அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸுக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ரஜினி நடிப்பில் 2005-ல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி.

இப்படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான நிலையில் நேற்று வெளியானது. முதல் பாகத்தை இயக்கியே பி.வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இதில் சந்திரமுகியாக கங்கனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

ADVERTISEMENT

லைகா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான சந்திரமுகி 2 படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. 

   

ADVERTISEMENT
ADVERTISEMENT