செய்திகள்

அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

29th Sep 2023 06:36 PM

ADVERTISEMENT

நடிகை குஷ்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை 2 மற்றும் அதன் 3ஆம் பாகத்தையும் அவரே இயக்கியிருந்தார். ஆனால் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்ற 2 பாகங்களுக்கு கிடைக்கவில்லை. 
இதனிடையே அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை எடுக்கும் முயற்சியில் இயக்குநர் சுந்தர்.சி இறங்கியிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை குஷ்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 
படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவ்னி சினிமேக்ஸ் பி லிமிடட் சார்பில் குஷ்பு வழங்கும் இந்த படம் பொங்கல் அன்று திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT