செய்திகள்

இணையத்தில் வைரலாகும் இறுகப்பற்று படத்தின் புதிய பாடல்!

29th Sep 2023 07:47 PM

ADVERTISEMENT

இறுகப்பற்று படத்திலிருந்து வெளியாகியுள்ள புதிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமான யுவ்ராஜ் தயாளன் இறுகப்பற்று படத்தினை இயக்கியுள்ளார். 

நடிகர்கள் விக்ரம் பிரபு, மாநகரம் புகழ் ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும், நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த 3 ஜோடிகளின் காதல் கதையை படமாக எடுத்துள்ளார் இயக்குநர் யுவராஜ் தயாளன். 

எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, பி. கோபிநாத், தங்கபிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தினை பொடென்சியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி வழங்குகிறது. 

ADVERTISEMENT

இப்படத்துக்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல்கள் எழுதியுள்ளார். முன்னதாக, இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இதையும் படிக்க: அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்த நிலையில், இறுகப்பற்று படத்திலிருந்து மாயா மாயா என்ற புதிய பாடல் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் அக்.6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT