நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார்.மீண்டும் இக்கூட்டணி இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: லியோவுக்காக டப்பிங் பேசிய கமல்?
சமீபத்தில் சென்னை எண்ணூரில் வசித்துவந்த சூர்யாவின் தீவிர ரசிகரும் அப்பகுதி சூர்யா ரசிகர் மன்ற பொருளாலருமான அரவிந்த் சாலை விபத்தில் பலியானார்.
இந்நிலையில், இதனை அறிந்த நடிகர் சூர்யா மறைந்த தன் ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.