லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக, இசைவெளியீட்டு விழா மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
இதையும் படிக்க: விஜய்யின் அரசியல் வருகை... ரத்தான லியோ இசைவெளியீட்டு விழா.. என்ன நடக்கிறது?
அதற்காக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தகவல்கள் பரவி வந்தன.
ஆனால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: லியோ: சிக்ஸ் பேக் தோற்றத்தில் சாண்டி!
இந்நிலையில், லியோ படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் டப்பிங் பேசியதாகக் கூறப்படுகிறது. சில நாள்களாக கமல் விக்ரம் பட தோற்றத்தில் இருப்பதால் அவர் லியோ படத்தில் இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. டப்பிங்கின் போது நடிகர் விஜய் உடனிருந்ததாகவும் தகவல்!