செய்திகள்

ஆதி - லட்சுமி மேனனின் சப்தம் படப்பிடிப்பு நிறைவு

28th Sep 2023 06:11 PM

ADVERTISEMENT

ஆதி மற்றும் லட்சுமி மேனம் நடித்துள்ள  சப்தம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரம், வல்லினம், குற்றம் 23 திரைப்படங்களை இயக்கிய அறிவழகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஆல்பா பிரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து சப்தம் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரசிகர்கள் பாவமில்லையா? சந்திரமுகி 2: திரை விமர்சனம்

இயக்குநர் அறிவழகன், அவர் இயக்கிய முதல் படமான ஈரம் படத்தின் கதாநாயகன் ஆதியுடன்  மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT