சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல தொடர் இனி ஒருமணிநேரம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக டிஆர்பி மற்றும் மக்களிடம் கிடைத்த அதீத வரவேற்பின் காரணமாக அரைமணிநேரத்திலிருந்து ஒருமணிநேரம் ஒளிபரப்பாகவுள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் வானத்தைப் போல தொடர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு 8 - 8.30 வரை ஒளிபரப்பான நிலையில், இனி 8 - 9 மணிவரை ஒளிபரப்பாகவுள்ளது.
படிக்க | புதிய சீரியலால் முன்னணி சீரியல் நேரம் மாற்றம்!
அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடர், திருமணம் ஆன பிறகு அண்ணன், தங்கை உறவு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவரிக்கிறது. ஸ்ரீகுமார், மான்யா, அஷ்வந்த் கார்த்தி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படிக்க | நயன்தாராவுடன் நடிக்கும் கயல் தொடர் நடிகை!
சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் டாப் 5 தொடர்களில் ஒன்றாக உள்ளது. கடந்த வாரம் 9.53 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 3வது இடத்தில் இருந்தது. முதலிடத்தில் எதிர்நீச்சல் தொடரும், இரண்டாவது இடத்தில் கயல் தொடரும் உள்ளன.