செய்திகள்

ஐ லவ் யூ ஷாருக்கான் சார்: ஜவானை வாழ்த்திய விஜய்!

27th Sep 2023 05:52 PM

ADVERTISEMENT

 

இயக்குநர் அட்லி, இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. வெளியானதும் கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. இதுவரை ரூ.1,004 கோடி வசூலித்த இப்படம் மேலும் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்க: அந்த மயான அமைதியால் 8 ஆண்டுகளைத் தொலைத்தேன்: யுவராஜ் தயாளன்

ADVERTISEMENT

இந்நிலையில், நடிகர் விஜய் தன் எக்ஸ் தளத்தில் ஜவானுக்காக ஷாருக்கான், அட்லியைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். மேலும்,  ‘ஐ லவ் யூ ஷாருக்கான் சார்’ எனக் குறிப்பிட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

முன்னதாக, ஷாருக்கான் விஜய்யின் லியோ படத்தைக் காண ஆவலாக இருப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT