செய்திகள்

நயன்தாராவுடன் நடிக்கும் கயல் தொடர் நடிகை!

27th Sep 2023 05:32 PM

ADVERTISEMENT

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில் கயல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் இணைந்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இத்தொடரில் தேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரனுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இந்த நிலையில், இவருக்கு நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இப்பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து,  ஐஸ்வர்யா ரவிச்சந்திரனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தில், யோகிபாபு நடிக்கிறார். பிரபல யூடியூப் சேனலில் புகழ்பெற்ற டூட் விக்கி இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இதையும் படிக்க: நாளை திரையரங்குகளில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்!

மேலும், ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT