செய்திகள்

முற்றிலும் பொய்யானது: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்! 

26th Sep 2023 09:15 PM

ADVERTISEMENT

 

2006-ல் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக  அறிமுகமானவர்  நித்யா மேனன். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார்.

குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. 

இதையும் படிக்க: சிம்பு 48 படத்தில் கேஜிஎஃப் இசையமைப்பாளர்? 

ADVERTISEMENT

தற்போது, சில மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில், அவர் நடிப்பில் உருவான ‘குமாரி ஸ்ரீமதி’ தொடர் அமேசான் பிரைம் தளத்தில் செப்.28-ல் வெளியாகிறது. 

இதையும் படிக்க: மைக்கேல் படத் தோல்விக்கு காரணம் இதுதான்: சந்தீப் கிஷன்

“தெலுங்கு சினிமாவில் எனக்கு இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டேன். முக்கியமாக, தமிழ் ஹீரோ நடிகர் ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார்” என நித்யாமேனன் கூறியதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், இது முற்றிலும் பொய்யானதென நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார். மேலும் இது மாதிரி எந்த நேர்காணலும் தான் தரவில்லையெனவும் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT