செய்திகள்

டைகர் நாகேஸ்வர ராவ் டிரைலர் எப்போது?

26th Sep 2023 05:13 PM

ADVERTISEMENT

 

1970-களில் ஆந்திராவில் ஸ்டூவர்ட்புரம் என்ற இடத்தில் ராபின் ஹுட்டாக வாழ்ந்த டைகர் நாகேஸ்வர ராவ் என்பவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது.

ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  

இதையும் படிக்க: தன் ஆசிரியரை சந்தித்த சூர்யா!

ADVERTISEMENT

பான் இந்தியப் படைப்பான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தின் முதல் பாடலான ‘ஏக்தம் ஏக்தம்’ பாடலின் லிரிக்கல் விடியோவும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தமிழில் இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். அஜய் கிருஷ்ணா பாடியுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் அறிவிப்பு இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT