நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.
சமூக வலைதளங்களில் சிம்பு 48 படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்திய படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ரூ.100 கோடி பட்ஜெட் ஆகுமென தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீபிகா படுகோன் கதாநாயகியாக இருந்தால் பொருத்தமாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: மைக்கேல் படத் தோல்விக்கு காரணம் இதுதான்: சந்தீப் கிஷன்
அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில் தீபிகா படுகோன் நடித்தால் இது அவருக்கு இரண்டாவது தமிழ் படமாக இருக்கும். முதல் படம் கோச்சடையான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 2,000 ரூபாயில் படமெடுத்து ரூ.75 லட்சம் சம்பாதித்தேன்: ராம் கோபால் வர்மா
சமீபத்தில் சிம்பு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். ஸ்டைலாக இருக்கும் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
இதையும் படிக்க: 8 ஓவர்களில் 100 ரன்கள்: சாதனை படைத்த இங்கிலாந்து அணி!
கேஜிஎஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை படக்குழு அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சலார் படத்தின் வெளியீட்டில் ரவி பஸ்ரூர் பிஸியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.