லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார்.
இப்படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க | டைகர் நாகேஸ்வர ராவ் டிரைலர் எப்போது?
இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில், வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று அச்சிடப்பட்டுள்ளது.