தனி இசைக் கலைஞராக இருந்த ஹிப்ஹாப் ஆதி பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
ஹிப்ஹாப் ஆதியின் 6வது படமாக வீரன் ஜூன் மாதம் வெளியாகியது. சூப்பர் ஹீரோ படமான வீரன் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றன. தற்போது இந்தப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்க கிடைக்கிறது.
இதையும் படிக்க: மைக்கேல் படத் தோல்விக்கு காரணம் இதுதான்: சந்தீப் கிஷன்
ஹிப்ஹாப் ஆதி தனது 7வது படம் பற்றிய அறிவிப்பை கடந்தாண்டு வெளியிட்டார்கள். வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: 2,000 ரூபாயில் படமெடுத்து ரூ.75 லட்சம் சம்பாதித்தேன்: ராம் கோபால் வர்மா
இந்நிலையில், படப்பிடிப்பின்போது பள்ளிக் குழந்தைகளுடன் ஹிப்ஹாப் ஆதி பேசியுள்ளார். விடியோ எடுத்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பகிர்ந்து, “நான் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்வேன் அப்போதுதான் அவர்களது பெற்றோர்களது செல்போன்களில் இருந்து எடுக்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இக்காலத்து குழந்தைகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிறப்பாக இருக்கிறார்கள். அதை அவர்கள் சரியாக பயன்படுத்துகிறார்களா என்பது நம்மிடம்தான் உள்ளது” எனக் கூறியுள்ளார்.