செய்திகள்

இணையத்தில் வைரலாகும் இறைவன் படத்தின் முன்னோட்டக் காட்சி!

25th Sep 2023 05:54 PM

ADVERTISEMENT

இறைவன் படத்தில் இருந்து முன்னோட்டக் காட்சிகள்(ஸ்னீக் பீக்) வெளியாகியுள்ளது.

தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நரேன் விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற செப்.28 ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.  சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ADVERTISEMENT

இப்படத்துக்கு தணிக்கைத் துறையினர் ’ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளனர். ரன்னிங் டைம் 2.33 மணி நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: புதிய அத்தியாயம் தொடக்கம்! வாழ்த்து மழையில் அன்பே வா நடிகை!

இந்த நிலையில், இறைவன் படத்தில் இருந்து முன்னோட்டக் காட்சிகள்(ஸ்னீக் பீக்) வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT