செய்திகள்

வெளியானது ஸ்கந்தா டிரைலர்!   

25th Sep 2023 08:33 PM

ADVERTISEMENT

 

தமிழில் அடையாளம் எனும் குறும்படம் மூலம் அறிமுகமானவர் ராம் பொதினேனி. பின்னர் தெலுங்கில் படங்களை தொடர்ச்சியாக நடித்துவரும் ராம் பொதினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் திரைப்படம் சுமாரான வெற்றியே பெற்றது. இருப்பினும் பாடல்கள் நல்ல வரவேற்பினை பெற்றது. 

இந்நிலையில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் படத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படம்தான் ஸ்கந்தா. இந்தப் படத்தினை எழுதி இயக்குகிறார் பொயபடி ஸ்ரீனு. ராம் சரண், அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா ஆகியோரது படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா?: கிண்டல்களுக்கு பதிலளித்த எமி ஜாக்சன்! 

ADVERTISEMENT

பிரபல நடிகை ஸ்ரீ லீலா கதாநாயகியாக இந்தப் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ரவி தேஜாவுடன் தமாகா படத்தில் நடித்து மிகப்பெரும் ஆதரவினைப் பெற்றார். சிறிய வயதிலிருந்தே பரதநாட்டியம் ஆடிப் பழகியவர். இவரது பல்சர் பாடல் செம்ம வைரலானது. 

இதையும் படிக்க: நாயகியாக அறிமுகமானார் சல்மான் கானின் தங்கை மகள்!

தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய படமாக உருவாக உள்ளது. சமீபத்தில் படத்தின் கல்ட் மாமா பாடல் வெளியாகியது. லெஜெண்ட் படத்தில் நடித்திருந்த ஊர்வசி ரௌடேலா இந்தப் பாடலில் ரா பொதினேனியுடன் நடனம் ஆடியுள்ளார். 

இதையும் படிக்க: சுந்தீப் கிஷன்- சிவி குமார் கூட்டணியில் மாயவன் 2! 

உலகம் முழுவதும் செப்.15ஆம் நாள் வெளியாகுமெனவும் படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT