தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து ஷங்கரின் ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உள்பட சில படங்களில் நடித்தார்.
பின், மார்க்கெட் இழந்ததால் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர் நீண்ட நாள்கள் கழித்து அருண் விஜய் நடிக்கும் 'மிஷன் அத்தியாயம் 1' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதையும் படிக்க: நாயகியாக அறிமுகமானார் சல்மான் கானின் தங்கை மகள்!
இன்ஸ்டாகிராமில் எமி ஜாக்சன் புதிய தோற்றத்தில் உள்ள தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்படங்கள் வைரலானதால் ரசிகர்கள், இது எமியா இல்லை ஜாக்சனா என கிண்டலடித்தனர்.
இதையும் படிக்க: ரூ.1000 கோடி வசூலை கடந்த ஜவான் திரைப்படம்!
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பனெய்மர் படத்தில் சிலியன் மர்ஃபி நாயகனாக நடித்திருந்தார். எமியின் இந்த புதிய தோற்றம் அவரைப் போலவே இருப்பதாக பலரும் கமெண்ட்டுகளில் கூறியிருந்தார்கள்.
இதையும் படிக்க: தோனியின் சாதனை முறியடிப்பு: அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த இம்ரான் தாஹிர்!
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் “நான் ஒரு நடிகை. எனது வேலையை முனைப்பாக எடுத்து செய்கிறேன். கடைசி மாதம் லண்டனின் புதிய படம் ஒன்றுக்காக நான் புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்தக் கதாபாத்திரத்துக்காக நான் உடலெடை குறைத்துள்ளேன். இந்திய நிலப்பரப்பில் இது குறித்து இணையத்தில் ஆண்கள் பலரும் கூக்குரலிட்டது வருத்தமாக இருக்கிறது.
நான் சிலருடன் நடித்திருக்கிறேன். சினிமாவுக்காக அவர்களது உடல் குறைப்பை பலரும் பாராட்டியுள்ளார்கள். ஆனால் இதையே ஒரு பெண் செய்யும்போது அது அழகாக இல்லையென கூறுகிறார்கள். அதனால் என்னை கிண்டல் செய்யும் உரிமை அவர்களுக்குள்ளதாக நினைக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.