செய்திகள்

பிரபல மலையாள இயக்குநர் கேஜி ஜார்ஜ் காலமானார் 

24th Sep 2023 02:55 PM

ADVERTISEMENT

 

மலையாளத்தில் 1970-1980களில் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர் இயக்குநர் கேஜி ஜார்ஜ். 1976இல் ஸ்வப்நதானம் என்ற தனது முதல் படத்தினை இயக்கினார் ஜார்ஜ். இந்தப் படத்துக்கு சிறந்தப் படத்திற்கான கேரள மாநில அரசின் விருதும் இந்திய அரசின் தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் இவர் இயக்கிய பல படங்கள் கிளாசிக்குகளாக இன்றளவும் விமர்சகர்கள் மத்தியிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளன. யவனிகா, உள்கடல், இரகள் என இவரது படங்கள் மிகவும் புகழ் பெற்றவை. 

இதையும் படிக்க: குஷி: ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!  

ADVERTISEMENT

9 கேரள மாநில அரசின் விருதுகளை பெற்றுள்ளார். பரதன் பத்மராஜன் உடன் இவர் இணைந்து பணியாற்றியது சினிமா வரலாற்றில் முக்கியமான பங்களிப்பாக இருக்குமென சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

இதையும் படிக்க: ஆர்டிஎக்ஸ்: ரூ.100 கோடி வசூல்; எந்த ஓடிடியில் பார்க்கலாம்? 

மலையாள சினிமாவில் வாழ்நாள் பங்களிப்பிற்காக 2016இல் ஜேசி டானியல் விருதினை பெற்றுள்ளார். மலையாள சினிமாவில் இது உயரிய விருதாக கருதப்படுகிறது. 

பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கேஜி ஜார்ஜ் 77 வயதில் கேரளத்திலுள்ள தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். 

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் கேஜி ஜார்ஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT