செய்திகள்

எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் தொடரின் நேரம் மாற்றம்!

24th Sep 2023 04:07 PM

ADVERTISEMENT


இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துவரும் தொடரின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதிமுதல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 

இதற்காக ஏற்கெனவே ஈரமான ரோஜாவே -2 தொடர் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டது. இதேபோன்று தற்போது எஸ்.ஏ. சந்திரசேகர் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் கிழக்கு வாசல் தொடரில் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

படிக்க பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம்!

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் 7 முதல் விஜய் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகி வந்த நிலையில் இனி மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதிமுதல் இந்த நேர மாற்றத்தில் கிழக்கு வாசல் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படிக்க | மறுஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இத்தனை வரவேற்பா? டிஆர்பி வெளியீடு!!

 

ADVERTISEMENT
ADVERTISEMENT