செய்திகள்

சிம்பு 48: வைரலாகும் சிம்புவின் புதிய புகைப்படங்கள்! 

24th Sep 2023 10:56 AM

ADVERTISEMENT

 

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். 

சமூக வலைதளங்களில் சிம்பு 48 படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்திய படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ரூ.100 கோடி பட்ஜெட் ஆகுமென தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீபிகா படுகோன் கதாநாயகியாக இருந்தால் பொருத்தமாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ADVERTISEMENT

இதையும் படிக்க: ஆர்டிஎக்ஸ்: ரூ.100 கோடி வசூல்; எந்த ஓடிடியில் பார்க்கலாம்? 

அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில் தீபிகா படுகோன் நடித்தால் இது அவருக்கு இரண்டாவது தமிழ் படமாக இருக்கும். முதல் படம் கோச்சடையான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க: யாரும் காணாத வெற்றி: ரூ.1000 கோடியை நெருங்கும் ஜவான்! 

சிம்புவுடன் பேசும் புகைப்படங்களை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.  இதில் சிம்பு நீண்ட முடிகளுடன் இருக்கிறார். 

இந்நிலையில் சிம்பு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஸ்டைலாக இருக்கும் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

சென்னையில் நடந்த டெஸ்ட் ஷுட்டில் படக்குழு மிகுந்த திருப்திய அடைந்ததாகவும் படப்பிடிப்பு நவம்பரில் நடைபெறுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT