செய்திகள்

குஷி: ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!  

24th Sep 2023 11:32 AM

ADVERTISEMENT

 

ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். குஷி திரைப்படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் செப்.1 ஆம் தேதி வெளியானது. 

இதையும் படிக்க: சிம்பு 48: வைரலாகும் சிம்புவின் புதிய புகைப்படங்கள்! 

ADVERTISEMENT

காதல், காமெடி, எமோஷனல் என தெலுங்கில் நல்ல வரவேற்பும், தமிழில் கலவையான விமரிசனமும் பெற்று குஷி திரைப்படம் 3 நாள்களில் ரூ.70.23 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

இதையும் படிக்க: ஆர்டிஎக்ஸ்: ரூ.100 கோடி வசூல்; எந்த ஓடிடியில் பார்க்கலாம்? 

இப்படத்தின் வெற்றிக்காக 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசளித்து தனது அன்பை வெளிப்படுத்தினார் நடிகர் விஜய் தேவரகொண்டா. மக்களுக்கு எனது மகிழ்ச்சியை பகிர்ந்தளிக்கிறேன் என நெகிழ்ச்சியாக கூறினார். 

இதையும் படிக்க:  யாரும் காணாத வெற்றி: ரூ.1000 கோடியை நெருங்கும் ஜவான்! 

இந்த நிலையில், குஷி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT