நடிகர் விஜய் சேதுபதி தமிழின் முன்னணி நடிகராக இருக்கிறார். தெலுங்கு ஹிந்திப் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். 2021இல் தெலுங்கில் உப்பெனா படத்தில் நடிகை கீரித்தி ஷெட்டியுடன் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் வரவேற்பு கிடைத்த இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழின் புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் எழுதி இயக்கிய லாபம் படத்தில் கதாநாயகியாக கீரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் அப்போது நடிகர் விஜய் சேதுபதி கீரித்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்து விட்டார். அதற்கான காரணத்தை அவர் முன்னமே தெரிவித்திருந்தாலும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மீண்டும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: நடு இரவில் பேட்டிங் பயிற்சி செய்த அஸ்வின்! (விடியோ)
அதில் விஜய் சேதுபதி, “நான் உப்பெனா படத்தில் க்ரித்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்திருந்தேன். அந்தப் பட வெற்றிக்குப் பிறகு தமிழில் ஒப்பந்தமாகியிருந்தேன். படக்குழு நடிகை கீரித்தி ஷெட்டி நடிகையாக இருந்தால் நன்றாக இருக்குமென கூறினார்கள். அப்பாவாக நடித்துவிட்டு ரொமான்ஸ் செய்ய முடியாது.
இதையும் படிக்க: மூத்த நடிகர் மதுவின் 90வது பிறந்தநாள்: சினிமா பிரபலங்கள் வாழ்த்து!
உப்பெனா படத்தின் க்ளைமேக்ஸில் அவர் தயங்கும்போது நான்தான் உனக்கு எனது மகன் வயதிருக்கும். என்னை அப்பாவாக நினைத்து நடி என்று கூறினேன். நானும் கீரித்தியை மகளாகத்தான் பார்க்கிறேன். அதனால் அவரை தயவு செய்து கதாநாயகியாக தேர்வு செய்ய வேண்டாம் எனக் கூறினேன். எனது மகள் வயதிருக்கும் அவரையும் எனது மகளாகவே பார்த்தேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: லியோவுடன் மோதுகிறதா?: வெளியானது துருவ நட்சத்திரம் டிரைலர், ரிலீஸ் தேதி!
ஜவானுக்குப் பிறகு விஜய் சேதுபதி தனது 50வது படமான மஹாராஜாவில் நடித்து முடித்துள்ளார். ஹிந்தி மேரி கிறிஸ்துமஸ் படங்கள் வெளியிட்டுக்கு காத்திருக்கிறது.
நடிகை கீரித்தி ஷெட்டி தற்போது ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார்.