செய்திகள்

வெளியானது சந்திரமுகி-2 படத்தின் 2வது டிரைலர்

23rd Sep 2023 09:13 PM

ADVERTISEMENT

சந்திரமுகி-2 படத்தின் 2வது டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது. மேலும், படத்தில் கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா புரடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தை சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இயக்கி வருகிறார். படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை - தோட்டா தரணி.  

படம் வரும் செப்.28ஆம் நாள் வெளியாக உள்ளது. அதனால் படத்தை புரமோஷன் செய்யும் பணியில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சந்திரமுகி-2 படத்தின் 2வது டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT