செய்திகள்

பாலாவின் வணங்கான் பட அப்டேட்

23rd Sep 2023 07:09 PM

ADVERTISEMENT

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். இந்த படத்தில் நாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

திருவண்ணாமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

ஆரம்பத்தில் வணங்கான் படம் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த நிலையில் ஒருசில காரணங்களால் படத்திலிருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT