செய்திகள்

அயலான் ரிலீஸ் தேதி, டீசர் தேதி அறிவிப்பு!

23rd Sep 2023 04:34 PM

ADVERTISEMENT

 

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

இதையும் படிக்க: கீரித்தி ஷெட்டியை நாயகியாக தேர்வு செய்ய வேண்டாமென்றேன்: விஜய் சேதுபதி 

ADVERTISEMENT

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து  கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற தீபாவளி (நவ.12) அன்று அயலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த வேளையில்  படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிக்க: யாரும் காணாத வெற்றி: ரூ.1000 கோடியை நெருங்கும் ஜவான்! 

சிவகாா்த்திகேயனின் மாவீரன் வெற்றிக்குப் பிறகு இந்தப் படம் வெளியாவதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தின் டீசர் வெளியாகும் என கூறியுள்ளார்கள்.  

இதையும் படிக்க: நடு இரவில் பேட்டிங் பயிற்சி செய்த அஸ்வின்! (விடியோ)

ADVERTISEMENT
ADVERTISEMENT