செய்திகள்

இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்குமாரின் ரீசண்ட் விடியோ

23rd Sep 2023 06:25 PM

ADVERTISEMENT

சென்னையில் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்திருந்த நடிகர் அஜித்குமாரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் 62 ஆவது படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளார். லைகா தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் வேலைகள் ஒருபக்கம் நடந்தாலும் அஜித் தனது வெளிநாட்டு பைக் சுற்றுலாவில் தீவிரம் காட்டி வந்தார். இதனால் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. 

ஆனால் இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் மறுத்தது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தனது பைக் டூர் சுற்றுப்பயணத்தை முடித்துத்கொண்டு ஓமனிலிருந்து நேற்று சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அஜித்குமார் நட்சத்திர ஹோட்டலில் நடந்த தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். அப்போது ஹோட்டலுக்கு அஜித் வந்திருப்பதை அறிந்த அங்கிருந்த ரசிகர் ஒருவர் அவரை போட்டோ எடுக்க முயற்சி செய்துள்ளார். 

இதனைக்கண்ட அஜித் போட்டோ எடுக்காதீங்க என்று அந்த ரசிகருக்கு அன்பு கட்டளையிட்டார். தற்போது இதுதொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் சென்னை திரும்பியதால் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு விரைவிலேயே தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT