நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இறைவன் படத்திற்கு ஏ சான்றிதழ்!
செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இப்படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் ரூ.62.11 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எப்படி இருந்தவன் நான்... நினைத்தால் வேதனையே மிஞ்சுகிறது: எஸ்.ஜே.சூர்யா
இந்நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், முதலில் மதன் பாண்டியனாக நடிக்க பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை அணுகலாம் என ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்திருந்திருக்கிறார். ஆனால், மதன் கதாபாத்திரத்திலும் நானே நடிக்கிறேன் என எஸ்.ஜே.சூர்யா முன் வந்ததால் முடிவை மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அனுராக் காஷ்யப் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமானார். அடுத்ததாக, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘மகாராஜா’ படத்திலும் நடித்துள்ளார்.