செய்திகள்

திருமணமா? பதிலளித்த த்ரிஷா!

21st Sep 2023 04:40 PM

ADVERTISEMENT

 

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.

அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு பிறகு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா.

ADVERTISEMENT

விஜய்யின் லியோ படத்தில், மலையாளத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக ராம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். த்ரிஷாவை மையமாக கொண்ட ‘தி ரோடு’ திரைப்படம் அக்.6 ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிக்க: எப்படி இருந்தவன் நான்... நினைத்தால் வேதனையே மிஞ்சுகிறது: எஸ்.ஜே.சூர்யா

மேலும், அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் படக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மலையாள சினிமா தயாரிப்பாளர் ஒருவரை த்ரிஷா திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது, இதற்கு த்ரிஷா, ‘வதந்திகளைப் பரப்பாமல் அமைதியாக இருங்கள்’ என லியோ போஸ்டர் வசனத்தைக் குறிப்பிட்டு இவை வெறும் வதந்திதான் என பதிலளித்துள்ளார்.

Tags : trisha leo
ADVERTISEMENT
ADVERTISEMENT