செய்திகள்

எப்படி இருந்தவன் நான்... நினைத்தால் வேதனையே மிஞ்சுகிறது: எஸ்.ஜே.சூர்யா

21st Sep 2023 03:31 PM

ADVERTISEMENT

 

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: எமி ஜாக்சனா இது?

இப்படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் ரூ.62.11 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் வெற்றிவிழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்ததுதான் மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறேன். எப்போதும், நல்ல நடிகனாக வர வேண்டும் என்பதே என் ஆசை. அதற்காக பல போராட்டங்களைச் சந்தித்துள்ளேன். 2004 ஆம் ஆண்டு நியூ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானேன். 2005-ல் அன்பே ஆருயிரே படத்தை வெளியிட்டேன். இரண்டும் மிகப்பெரிய வெற்றிப்படம். கோவையில் பெரிய நட்சத்திர நடிகர்கள் தங்கள் படங்களை ரூ.1.25 கோடிக்கு விற்றபோது அன்பே ஆருயிரேவை நான் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்தேன். அப்படிப் பார்த்தால், இந்நேரம் நான் எங்கு இருந்திருக்க வேண்டும். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் சினிமாவிலிருந்து காணாமல் போனேன்.  இன்றும் இதை நினைக்கும்போதெல்லாம் வேதனையாக இருக்கிறது. இறைவி படத்திலிருந்து என் வாழ்க்கை மீண்டும் தொடங்கியது. அதன்பின், பெரிய இயக்குநர்களுடன் பணிபுரிய துவங்கினேன். மாநாடு நல்ல இடத்தைக் கொடுத்தது. அதன்பின், மார்க் ஆண்டனி மூலம் நான் விட்ட இடத்தை பிடித்துவிட்டேன். எல்லாருக்கும் நன்றி” எனக் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT