லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார். இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க | பிரபலங்களின் துக்க நிகழ்வுகளில் விடியோ எடுக்க அனுமதி பெற வேண்டும்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி
இந்நிலையில், படம் வெளியாகும் வரை லியோ அப்டேட் இருக்குமென விருது விழா ஒன்றில் லோகேஷ் கூறினார். அதன்படி ஞாயிற்றுக்கிழமை லியோ தெலுங்கு போஸ்டரும், திங்கள்கிழமை கன்னட போஸ்டரும் நேற்று(புதன்கிழமை) தமிழ்ப் போஸ்டரும் வெளியானது.
இந்நிலையில், இன்று இப்படத்தின் ஹிந்தி போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.