செய்திகள்

அவளுடன் நானும் இறந்துவிட்டேன்...மகள் இறப்பு குறித்து விஜய் ஆண்டனி உருக்கமானப் பதிவு!

21st Sep 2023 09:23 PM

ADVERTISEMENT

தனது மகள் இறப்பு தொடர்பாக நடிகர் விஜய் ஆண்டனி உருக்கமானப் பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் இன்று (செப்டம்பர் 21) வெளியிட்டுள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் கடந்த செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 19) அன்று அதிகாலை  தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வந்தனர். மன அழுத்தத்தின் காரணத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது மகள் இறப்பு தொடர்பாக நடிகர் விஜய் ஆண்டனி உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் இன்று (செப்டம்பர் 21) வெளியிட்டுள்ளார்.

 

ADVERTISEMENT

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம் பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரிலே நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும்,  அவளே தொடங்கி வைப்பாள் எனப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT