செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சி வருகை: முக்கிய தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

21st Sep 2023 07:48 PM

ADVERTISEMENT

பிக் பாஸ் நிகழ்ச்சி வருகையால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களைப் பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ஈரமான ரோஜாவே - 2 தொடர் இரவு 9.30 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் முதல் பாகம் கடந்த 2018 முதல் 2021 வரை ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே - 2 ஆம் பாகம் கடந்த ஜனவரி மாதம் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் சித்தார்த், திரவியம் ராஜகுமாரன், ஸ்வாதி கொண்டே, கேப்ரியல்லா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இத்தொடர் டிஆர்பியில் பின்தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளதால், தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற சேனல் தரவு முடிவெடுத்துள்ளது.

ஈரமான ரோஜாவே - 2 தொடரின் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: திருமண வாழ்க்கையில் நுழைந்த வானத்தைப்போல தொடர் நடிகர்!

அதன்படி, பிரைம் நேரத்தில்(Prime Time) ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே - 2 தொடர், அக்டோபர் 2 முதல் நான் பிரைம் நேரமான(Non Prime Time) மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT