செய்திகள்

மிர்ச்சி செந்திலுடன் இணைந்த நடிகை ஜோதிகா!

21st Sep 2023 05:40 PM

ADVERTISEMENT

நடிகை ஜோதிகாவுடன் இணைந்து மிர்ச்சி செந்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகா, கடைசியாக 2021ஆம் ஆண்டு வெளியான ‘உடன்பிறப்பு’ படத்தில் சசிகுமாருடன் நடித்திருந்தார்.

தற்போது, நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ’காதல்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடிக்க ஜோதிகாவிடம் கால்சீட் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT

நடிகர் மிர்ச்சி செந்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதையும் படிக்க: திருமணமா? பதிலளித்த த்ரிஷா!

இந்த நிலையில், நடிகை ஜோதிகாவுடன் இணைந்து மிர்ச்சி செந்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்களை மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT