செய்திகள்

ராகவா லாரன்ஸ் தம்பியின் புதிய பட அறிவிப்பு!

19th Sep 2023 12:02 PM

ADVERTISEMENT

நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் கதாநாயகனாக அவர் அறிமுகமாகிறார்.

பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்கு புல்லட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. எல்வினுக்கு ஜோடியாக வைஷாலி ராஜ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: நாயகன் மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்த நிலையில், புல்லட் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT