இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. ஜெட் வேகத்தில் வசூலித்து வருகிறது ஜவான்.
இதையும் படிக்க: கால்சீட் கிடைத்துவிட்டது: வித்தியாசமாக அறிவித்த பிரதீப் ரங்கநாதன்-விக்னேஷ் சிவன்!
இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் நாளில் அதிகமாக வசூலித்த படமாக ஜவான் திரைப்படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நாக சைதன்யாவுடன் மீண்டும் இணையும் சாய் பல்லவி?: படக்குழு வெளியிட்ட விடியோ!
2,3,4வது நாள்கள் முறையே ரூ.240 கோடி, ரூ.384 கோடி, ரூ.520 கோடிகளாக இருந்தன. தற்போது 12-வது நாள் வசூல் விவரத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 12வது நாளில் ரூ.883.68 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. உண்மையான வசூல் சரவெடி என படக்குழு போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.